“போர் முடிவுக்கு வரும் – அமெரிக்கா

அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

“பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எந்த நேரத்திலும் ஒரு நேரடி சந்திப்பு நடக்கலாம். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம்,” என்று அவர் ஃபாக்ஸ் நியூஸில் கூறினார்.

மேலும் மார்கோ ரூபியோ, “போலி அல்லது போலியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இரான் தொடர்ந்து காலதாமதம் செய்வதை அதிபர் டிரம்ப் விரும்பமாட்டார்,” என்றும் கூறினார்.

“நான் ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க விரும்பவில்லை, ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த இறுதி இலக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது,” என்று ரூபியோ கூறினார்.

“சில காலமாக இந்த நாட்டுக்குப் பயனுள்ளதாக இருந்து வரும் கூட்டணி இன்னும் செயல்படுகிறதா என்பதை அமெரிக்கா பார்க்க வேண்டியிருக்கும்,” என்று கூறி, நேட்டோவை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் விமர்சித்தார்.

முன்னதாக, ‘இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்’ இரானிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.