மாணவர்களை தடுக்கும் சக்தி கூட அமெரிக்க காவல்துறையினரிடம் இல்லை – மகளை இழந்த தந்தை

136 Views

அமெரிக்காவின் ரெக்சஸ் மாநில பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உடனடியாக களத்தில் இறங்கி மாணவர்களை காப்பாற்றும் தகைமையற்று அமெரிக்க காவல்துறை செய்வதறியாது நின்றதாகவும், பொதுமக்களே உடனடியாக செயலில் இறங்கியதாகவும் நாலாவது தரத்தில் கல்விகற்ற தனது மகளை இழந்த தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

சல்வடோர் ரமோஸ் என்ற 18 வயது நபர் ஒரு மணிநேரமாக சிறுவர் பாடசாலையில் தங்கியிருந்து தாக்குதல் நடத்தியபோதும் அவரை உடனடியாக நிறுத்த கவல்துறையினரால் முடியவில்லை.

வெடிச்சத்தம் கேட்டு பொதுமக்கள் பாடசாலையை நோக்கி விரைந்தபோது அங்கு காவல்துறையினர் உள்ளே செல்லாது வெளிப்புறத்தில் நிலையெடுத்து பதுங்கியிருந்ததை கண்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (25) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டதுடன், 17 மாணவர்கள் காயமடைந்திருந்தனர்.

தாக்குதலுக்கு முன்னர் கடந்த 17 ஆம் நாள் டி.டி.எம்-4 ரக தன்னியக்க துப்பாக்கியை வாங்கிய நபர் பின்னர் 350 ரவைகளையும் கொள்வனவு செய்துள்ளார். அதன் பின்னர் 20 ஆம் நாள் மற்றுமொரு துப்பாக்கியை வாங்கிய அவர் பாடசாலையில் தாக்குதல் நடத்தமுதல் தனது அம்மம்மாவையும் சுட்டுள்ளார்.

துப்பாக்கி கலாச்சாரத்தை தனது பெருமையாக கொள்ளும் அமெரிக்காவின் பிடிவாதத்தால் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் அவர்கள் திரும்பி வரும் வரை கலக்கத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News

Leave a Reply