ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது – விமல் வீரவன்ச

எமது அரசியல் பயணத்தினால் பெரிய அரசியல் கட்சிகள் வெகுவிரைவில் சிறிய அரசியல் கட்சிகளாகும். மக்கள் பலம் எதனையும் மாற்றியமைக்கும் ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது.

தவறான ஆலோசனைகளுக்கு செவி சாய்த்ததால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று இந்நிலையை எதிர்கொண்டுள்ளார் என மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆசிய பலத்துடன் ஒன்றிணைந்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். மேற்குலகத்தவர்களின் ஆதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணிய முடியாது. ஊழலை முழுமையாக இல்லாதொழிக்க முடியாவிடினும் கட்டம் கட்டமாக இல்லாதொழிக்க முடியும்.முற்போக்கான ஜனநாயக அரசியல் கட்சிகள் அனைவரும் எம்முடன் இணைந்துக்கொள்ளலாம் என அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

மஹரகவில் உள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மேலவை  இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.