முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது எதிர்வரும் 08ஆம் திகதியுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டாகவும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதியன்று தங்களுடைய உறவுகளை இராணுவத்திடம் கையளித்த வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சர்வதேசமே தங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.



