254 Views
வியட்நாம் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.
இந்த 303 பேரில் 264 ஆண்களும் 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைத்தால் அவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் பொறுப்பளிக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று பாரா ளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.