அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை, மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யட்டியாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த சேவையைப் பெறலாம் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 13 குறித்து உருவாக்கப்பட்டுள்ள போலி விம்பத்தை சிங்கள மக்கள் நம்பக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரையானது காலத்தின் கட்டாய தேவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிலுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு தங்களது கட்சி முழு ஆதரவையும் வழங்கும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.