இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் எண்ணிக்கை 20 சத வீதம் வீழ்ச்சி!

இலங்கையில் சிறுவர் மட்டத்திலான எண்ணிக்கை விகிதத்தில் தொடர்ச்சியான மற்றும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1946ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிறுவர் மட்டத் தொகை 40 தொடக்கம் 42 வீதமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2024ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தொகை 20 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.