கொழும்பு மாநகர சபையின் ஆளுகையை மீண்டும் உறுதிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி!

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு கடும் இழுபறிக்கு மத்தியில் இன்று (31) நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் முடிவில், இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, 2 வாக்குகள் வித்தியாசத்தில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 22ஆம் திகதி கொழும்பு மாநகர முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு தோல்வியடைந்திருந்தது. அதன்போது, ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் பாதீடு முன்வைக்கப்பட்டு மறு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்திக்கு சபையில் தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், ஏனைய சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் கொழும்பு