கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தொழில்முயற்சியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 45 இலட்சம் பேரின் வேலைவாய்ப்புகளைத் தீர்மானிக்கும் இந்த துறை வீழ்ச்சியடைந்தால், ஒட்டுமொத்த உற்பத்தித் திறனும் முடங்கி குடும்பப் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, வங்கிக் கடன்களை மீளச் செலுத்த முடியாத நிறுவனங்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தும் ‘பரேட்’ (Parate) சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், வீழ்ச்சியடைந்துள்ள வணிகங்களுக்காக விசேட கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் நெருக்கடியில் உள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான விசேட பொருளாதாரப் பொதியொன்றை வழங்கித் தொழில்முயற்சியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தினார்.



