இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை இழந்துவிட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் ஜப்பானிற்கும் இடையில் 1952 ம் ஆண்டுமுதல் பல தசாப்தங்களாக இராஜதந்திர வர்த்தக உறவுகள் காணப்பகின்ற போதிலும் இலங்கை அரசாங்கத்தின் திடீர் மற்றும் தன்னிச்சையான கொள்கைகளால் ஜப்பானிய வர்த்தகர்கள் தற்போது இலங்கையில் வர்த்தகம் செய்வது குறித்த நம்பிக்கையை இழந்துள்ளனர் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடியாகி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பொருளாதார ஆட்சிமுறை மற்றும் வெளிப்படைதன்மை தொடர்பில் அடிக்கடி கொள்கை மாற்றங்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள இதன்காரணமாக ஜப்பானிய வர்த்தகர்கள் இலங்கை குறித்து நம்பிக்கையை இழந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை வாகன வர்த்தகர்கள் சம்மேளனத்தின் நிகழ்வில் கேள்விகளிற்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் எதிர்கால பொருளாதார நிலை மற்றும் மீட்சி குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கையில் ஊழலை இல்லாமல் செய்வதற்கான கொள்கைகள் வருமான இடைவெளியை குறைத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் அரசநிறுவங்களின் வினைத்திறனை அதிகரிப்பது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.