மனித குலத்திற்கு எதிரான கொடுமையான சித்திரவதையை தடுக்கும் முகமாக சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகெங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 26ஆம் திகதியை சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
சித்திரவதை என்பது ‘உடலால், உள்ளத்தால் நோவையும் வேதனையும் திட்டமிட்டு ஒருவர் மீது பிரயோகிப்பது’ என்று பொருள் கொள்ளப்படுகின்றது.
சித்திரவதை தொடர்பாக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையிலும் இந்த வாக்கியமே வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினத்தின் இந்த ஆண்டிற்கான தொனிப்பொருள் ‘அது நானாக இருக்கலாம் ‘ என்பதாகும். மனிதனை மனிதன் வதைப்படுத்தும் காட்டு மிராண்டித்தனத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பதே பலரதும் எண்ணமாகும்.
மாறாக நாகரிகம் வளர வளர மனிதனை வதைப்படுத்தும் உத்திகளும் நாளுக்குநாள் நவீனத்துவமடைந்து கொண்டு போவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்று வருகின்றன என குறிப்பிடப்பட்டிருந்தது.
சர்வதேச சட்டத்தின் கீழ் சித்திரவதை என்பது ஒரு குற்றமாகும். சர்வதேச சட்டத்தின் கீழ் சித்திரவதைக்கு முழுமையான தடை இருந்தபோதிலும், உலகின் அனைத்து பகுதிகளிலும் சித்திரவதை தொடர்கிறது