தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும்-இலங்கை தமிழரசு கட்சியின் கிளைக் கூட்டத்தில் தீர்மானம்

282 Views

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற குறித்த கூட்டம் தொடர்பில் நல்லூர் தொகுதிவெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளையின் பொதுச் சபைக் கூட்டம்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை நல்லூர்த் தொகுதிக் கிளைக் காரியாலயத்தில், அதன் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விசேட அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா கலந்து கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது தொகுதிக் கிளைத் தெரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலின்  முடிவில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் எனவும்  அதற்கு  உள் முரண்பாடுகளை சீர்செய்ய வேண்டுமெனவும்  தீர்மானம் மேற்கொண்டதுடன் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளும், பொது விடயங்களில் இணைந்து செயல்படுதல் வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Leave a Reply