இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இந்திய இலங்கை உறவுகள் மற்றும், இலங்கை அரசியலின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளது.



