வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளது.
இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், இலங்கை தமிழரசு கட்சியினால் நிர்வாக முடக்கல் போராட்டத்திறகு அழைப்பு விடுக்கப்பட்டது.
எதிர்வரும் 15ஆம் திகதி மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளதுடன் இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர் மன்னாருக்கு செல்லவுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் உற்சவமும் இடம்பெறுகிறது.
இந்தநிலையில் மன்னாரில் நேற்று முன் தினம் (12) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.