கொக்குதொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம்-சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு குழுவினர் கால்வாய் ஒன்றை தோண்டும் போது மனித எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் 13  எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

“அதில் ஒருவர்  விடுதலைப் புலிகளின் வதைமுகாமில் கொல்லப்பட்டு பின்னர் அங்கேயே புதைக்கப்பட்டார்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரித்து உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது” என அசங்க அபேரத்னஎன அவர் தெரிவித்துள்ளார்