அரசியல் பழிவாங்கல்களைத் தவிர அரசாங்கத்தால் வேறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் தலைவர்கள் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நீங்கள் அரசியலில் ஈடுபட்டால், அது உங்கள் வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி. தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலைக் கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறொன்றும் இல்லை. மக்கள் அரசியல் தலைவர்களை தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும், “நாம் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.