மக்களின் ஆதரவு கிடைக்குமென அரசாங்கம் நம்பிக்கை!

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் போன்று வாக்களிப்பு வீதம் பதிவாகாவிட்டாலும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் கிராமங்களின் அபிவிருத்திகளை அதிகரிப்பதற்கான பலத்தை நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வழங்குவர் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் இன்று (06) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் எதிர்கொண்டுள்ள முதலாவது தேர்தல் இதுவாகும். கடந்த 6 மாதங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பில் மக்கள் நன்கு அறிவர். தற்போது மக்களின் வாழ்க்கை சுமை குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதால் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் குறைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் கிராமங்களின் அபிவிருத்திகளை அதிகரிப்பதற்கான பலத்தை நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வழங்குவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நாம் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.