அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!

ஊடகங்களில் பொய்யை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த  அரசாங்கம் இன்று ஊடகங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த  மக்களின்  ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  வியாழக்கிழமை  நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்   வலுசக்தி  அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.