மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்படுவது இலங்கையின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர, போரில் சம்பந்தப்படாத மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தனது கவலையை தெரிவித்ததுடன், அத்தகைய தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை (08)   ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.