நாடு கடத்தப்பட்டவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மறுசீரமைக்க உதவுவதற்கும் முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து 41 வயது நபர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த சந்தேக நபர் 2019ஆம் ஆண்டு கட்டாருக்கு தப்பிச் சென்றுள்ளார். அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் நீல அறிவித்தல் அனுப்பப்பட்டது.

சந்தேக நபர் கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக குற்றச் சாட்டுகளை முன்வைத்து அவரை தடுப்புக் காவலில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் எடுப்பார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 நாடு கடத்தப்பட்டவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது