மாகாணசபை தேர்தல்களை இழுத்தடித்து அடுத்த ஆண்டு 2026,ல் நடைபெறாமல் காலத்தை கடத்தும் முயற்சியாகவே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) செயலாளர் ரின்வின் சில்வாவின் கருத்துள்ளது..
ரில்வின் சில்வா கூறுவதையே தேசிய மக்கள் சக்தி நடைமுறைப்படுத்தும் அவரை மீறி ஜனாதிபதி அநுராவாலும் தனித்து இயங்க முடியாத அப்படியொரு கட்டமைப்பு திசைகாட்டி ஆட்சியாளருக்கு உண்டு.
அடுத்ததாக புதிய அரசியல் யாப்பு திருத்தம் 2028, ல் ஆரம்பித்து 2029, ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுடன் அந்த புதிய அரசியலமைப்புடன் மேலும் ஐந்துவருடங்கள் பாராளுமன்றத்தை நீடிக்கும் எண்ணமும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு இருக்கலாம்.
ஏனெனில் இலங்கை சுதந்திரம் அடைந்த 1948, தொடக்கம், 2020, வரை நடைபெற்ற 16, பாராளுமன்ற தேர்தல்களிலும் சரித்திரத்தில் மிக அதிகப்படியான பெரும்பான்மை 159, ஆசனங்கள் கிடைத்த வரலாறு இல்லை. 2024, ல் 17, வது பாராளுமன்ற தேர்தலில்தான் அந்த வாய்ப்பு தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.
இனியும் இவ்வாறான ஒரு வாய்ப்பு தேசியமக்கள் சக்திக்கோ வேறு எந்த கட்சிக்கோ சரித்திரத்தில் கிடைக்கப்போவதும் இல்லை. அதனால் தாம் சிங்கள பௌத்த நாட்டுக்கு (தமிழர்களுக்கு இல்லை) என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்து “ஒரேநாடு ஒரேதேசம்” “நாம் இலங்கையர்” என்ற வரையறைக்குள் ஆட்சிசெய்வதற்காகவே மாகாணசபை தேர்தல் இந்த முறை ஒருதடவை மட்டுமே கல்லில் நார் உரிப்பதைப்போல் நடைபெறும்.
2029, புதிய அரசியல் யாப்பு திருத்தமும், மேலும் ஐந்துவருடங்கள் பாராளுமன்ற நீடிப்பும் ஒரே நாளில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும். அதிகப்படியான 159,ஆசனங்கள் ஆளும்தரப்புக்குண்டு, அதைவிட எதிர்கட்சியிலும் பலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கலாம். மூண்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் ஆதரவுடன் நிறைவேறும்.
அதன் பின்னர் உடனே புதிய அரசியலைப்பும், ஐந்து ஆண்டு பாராளுமன்ற நீடிப்புக்குமாக சர்வஜன வாக்கெடுப்பு இரண்டு தீர்மானங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் அங்கீகாரத்தை அதிகப்படியான ஆதரவுடன் நிறுவேறும்.
புதிய அரசிலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை நீக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் முழுமை பெறும்போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கா பிரதமராக 2029, தொடக்கம் 2034, வரை பதவி ஏற்க வாய்ப்புண்டு. எதிர்கட்சிகள் மக்களை அணிதிரட்டு தற்போதைய ஆட்சிக்கு எதிராக பலமாக போராடும் வலிமை அறவே இல்லை. எனது இந்த கருத்து சிலருக்கு நகைச்சுவையாகவும், எனது கற்பனை எனவும் கூறலாம். இது எனது தனிப்பட்ட ஆய்வு மட்டுமே.. சிந்தித்தால் புரியும்.! பொறுத்திருந்து பாருங்கள்!



