தங்காலை நகர சபை, யட்டியந்தோட்டை பிரதேச சபையின் வரவு – செலவு திட்டங்கள் தோல்வி!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள தங்காலை நகர சபை மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச சபை ஆகியற்றின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ள வெலிகம பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தங்காலை நகர சபையின் முதலாவது வரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்காலை நகர சபையின் வரவு – செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள வெலிகம பிரதேச சபையின் வரவு – செலவு திட்டத்தில் பொது எதிர்க்கட்சி 23 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளது. யட்டியாந்தோட்டை பிரதேச சபையின் வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாக 13 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, சர்வஜன அதிகாரம் மற்றும் சுயாதீன உறுப்பினர்கள் வரவு -செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தங்காலை நகரசபையில் தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் 10 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. இங்கும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.