சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் அநுர அரசு இலக்கை அடையலாம் – சரத் பொன்சேகா தெரிவிப்பு

ஜனாதிபதியின் கிளீன் சிறீலங்கா செயற்திட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் ஒட்டு மொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஒரு வாரத்துக்கு மாத்திரம் வீதியைத் துப்புரவு செய்வதால் நாட்டை தூய்மைப்படுத்த முடியாதுஎன்றும், “சட்டத்தை முறையாக அமுல் படுத்தினால் இலக்கை அடையமுடியும்என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கிளீன் சிறீ லங்கா செயற்திட்டம் சிறந்தது. அரசியல் நோக்கத்துக்கு இந்த திட்டத்தைச் செயற்படுத்தக் கூடாதுஎன்றும் தெரிவித்த சரத் பொன்சேகா, “நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியிலிருந்து புதிய மாற்றங்கள் தோற்றம் பெறவேண்டும்என்றும் அவா் வலியுறுத்தினாா்.

சிங்கப்பூர் நாட்டில் கிளீன் செயற்திட்டம் ஆரம்பமான போது அரசாங்கத்துக்கு அந்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள்என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தாா்.