ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இந்தநிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடியே 85 இலட்சத்து 48 ஆயிரத்து 839 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் பெற்ற சலுகை விபரம்:
மஹிந்த ராஜபக்சவுக்கு….
111 பணியாளர்கள்
9 மருத்துவ ஊழியர்கள்
8 சாரதிகள்
2 எழுதுபவர்கள்
5 இயந்திரப் பணியாளர்கள்
1 கடற்படை உதவியாளர்
46 சிறப்பு நடவடிக்கைப் பணியாளர்கள்
16 சமையல்காரர்கள்
26 மின்சார வல்லுநர்கள்
4 சிவில் பொறியியலாளர்கள்
4 தொழில்நுட்ப பொறியியலாளர்கள்
2 களஞ்சிய காவலர்கள்
3 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள்
1 தச்சர்
1 நாய் பராமரிப்பாளர்
ஆகியோர் அடங்குவதாக அவர் கூறினார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு…. 60 பணியாளர்கள்
3 மருத்துவ உதவியாளர்கள்
1 பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்
6 சாரதிகள்
5 எழுதுபவர்கள்
8 பாதுகாப்பு அதிகாரிகள்
13 ஆதரவு பணியாளர்கள்
8 சமையல்காரர்கள்
3 தொழில்நுட்ப வல்லுநர்கள்
1 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்
6 சிறப்பு நிபுணர்கள்
1 நாய் பராமரிப்பாளர்
ஆகியோர் .
சலுகைகள் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கும், ஜனாதிபதியாக செயல்பட்டு இறந்தவர்களுடைய (பிரமதாசாவின் மனைவி ஹேமா )விதவை சலுகை 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூபா 98.5 மில்லியன் செலவழித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன் விபரம்:
*பிரமதாசாவின் மனைவி ஹேமா பிரேமதாச – ரூபா 2.687 மில்லியன்
*சந்திரிகா குமாரதுங்க – ரூபா 16.43 மில்லியன்
*மஹிந்த ராஜபக்ச – ரூபா 54.62 மில்லியன்
*மைத்திரிபால சிறிசேன – ரூபா 15.77 மில்லியன்
*கோட்டாபய ராஜபக்ச – ரூபா 12.28 மில்லியன்
*ரணில் விக்கிரமசிங்க – ரூபா 3.49 மில்லியன்.