அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு நாள் ஆரம்ப நிகழ்வுகள் (19/03/2026) இன்று மட்டக்களப்பு நாவலடி அன்னைபூபதி நினைவாலயத்தில் இடம்பெற்றது.
அத்துடன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அவர்களின் பணியகத்தில் தமிழரசுக்கட்சி மகளீர் அணி ஏற்பாட்டில் தியாகதீபம் அன்னைபூபதியின் வணக்கநிகழ்வு இடம்பெற்றது.
இந்திய அமைதிப்படையின் அராஜகங்களை எதிர்த்தும் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் அன்னை பூபதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாளின் நினைவு நாள் இன்று.
அன்னை பூபதி கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு , அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் போர் நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தை 1988, மார்ச்,19, ல் தொடங்கினர்.
அவை….
1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் இந்திய அரசு நிறைவேற்றாமையால் 1988,ஏப்ரல்,19, ல் 56, அகவையில் உயிர் நீத்தார்.
அன்னாரின் புகழ் உடல் மட்டக்களப்பு நாவலடியில் விதைக்கப்பட்டது..!





