சம்பள விடயத்தில் முழுமையான தீர்வு கிடைத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் ஜீவன் தொண்டமான்

118 Views

சம்பள விடயத்தில் முழுமையான தீர்வு கிடைத்தமைக்கு தொழிலாளர்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு ​உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

அத்துடன், நாட் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை 22 கம்பனிகளும் கடைப்பிடிக்கவேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் 1000 ரூபாயை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் :-  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 1000 ரூபாவை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எங்களுடைய கடுமையான நடவடிக்கையின் பயனாக சம்பள விடயத்தில் முழுமையான தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேவேளை ​​பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிபுடன் பணியாற்றிய எமது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணி அவிந்த்ரா ரோட்ரிகோ PC மற்றும் அவரது குழுவினருக்கும் தொழிலாளர்களின் சார்பாக எனது நன்றிகள் உரித்தாகட்டும் என  தெரிவித்துள்ளார்.

Leave a Reply