கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த – பாலி பல்கலைக்கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும், 1995/37 சட்டத்தை மாற்றி பௌத்த – பாலி பல்கலைக்கழகத்தை பட்டத்தினை விற்கும் வியாபார நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.