மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்

166 Views

IMG 2923 மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்

சம்பள முரண்பாட்டினை நீக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம்,இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய ஆசிரியர்கள்,அதிபர்கள் ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் ஆசிரியர்களின் 24வருட சம்பள முரண்பாட்டினை நீக்கு,பிள்ளைகளின் கல்வி உரிமையினை உறுதிப்படுத்து, கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்தினை கிழித்தெறி, அதிபர், ஆசிரியர் மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் அழுத்ததினை கொடுக்காதே உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்தபோராட்டத்தில் ஆசிரியர்கள்,அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.

Leave a Reply