மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்!

16941a92 5af2 4f71 ac36 45cbb8431f20 மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் சனிக்கிழமை (01) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன, ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க அரசிடம் தீர்க்க அரசிடம் நீதி கோருவோம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

28 ஆண்டுகளாக அமைதியாகக் காத்திருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 2026 வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளப் பரிந்துரைகளை வழங்குதல் என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பின் செயலாளர் அனில் புஷ்ப குமார மற்றும் அமைப்பாளர் பண்டார தலைமையில், இன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.