மலேசியாவில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழர்- என் கணவரின் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை- மனைவி ஆதங்கம்

425 Views

மலேசியாவில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழர்

கடந்த ஆண்டு மலேசியாவில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழர் தொடர்பாக தனது கணவனுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என  பிருந்தாஜினி விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 06-09-2020ம் ஆண்டு மலேசியாவில் கணபதிப்பிள்ளை விவேகானந்தன் என்னும் குடும்பஸ்தர் மலேசியாவில்  அடித்துக் கொல்லப் பட்டதாகவும் இது தொடர்பில் இதுவரையில் தனக்கு எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கப் படவில்லையெனவும் தெரிவித்து படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியான  பிருந்தாஜினி விவேகானந்தன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டுள்ளார்.

IMG 20211213 WA0036 மலேசியாவில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழர்- என் கணவரின் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை- மனைவி ஆதங்கம்

மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தான் நாட்டில் அண்மையில் அடித்து கொல்லப்பட்டவரின் படுகொலைக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த அவர், இதேபோன்று தனது கணவனும் அடித்துக் கொலை செய்யப் பட்டிருந்தபோதிலும் அதற்கு எதிராக யாரும் பேசக் கூட முன்வரவில்லையெனவும் அவர் கவலை தெரிவித்தார்.

“பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கம் மன்னிப்புக்கூட கேட்டுள்ளது.ஆனால் எனக்கு எந்தவிதமான ஆதரவும் கிடைக்கவில்லை.எனது கணவனை கொலைசெய்தவர்கள் யார் என்பது கூட தெரியாது.எனது கணவனின் படுகொலைக்கு எனக்கு நீதிவேண்டும். எனக்கு வழங்கப்படும் நீதியானது இலங்கையின் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதியைப் பெற்றக்கொடுக்கும்” என்றார்.

Leave a Reply