சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு! அரசு ஆராய்வதாகக் கூறுகிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச லண்டனின் பினான்சியல்டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடனை மீள செலுத்த முடியாத நிலைமையை தவிர்ப்பதற்காகவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காகவும் அனைத்து சாத்தியப்பாடுகளையும் முயல்கின்றோம் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் மீள செலுத்தவேண்டிய சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் உள்ளன-ஆகவே நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள பசில்ராஜபக்ச அதன் பின்னர் நாங்கள் கடன்பெற்றவர்கள் உள்ளனர் நாங்கள் அவர்களின் கடன்களை திருப்பி செலுத்தவேண்டும்,எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே நாங்கள் ஏதாவது விதத்தில் சமாளிக்க முடியுமா அல்லது வேறுவகையான விடயங்களை செய்ய முடியுமா என ஆராய்கின்றோம் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடன் திட்டமொன்று குறித்து அரசாங்கம் சிந்திக்கும் என தெரிவித்துள்ள நிதியமைச்சர் பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் இடம் பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நிலைமையை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச ஆனால் அரசாங்கம் அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்காக தன்னை தயார்படுத்திவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் 6.9 பில்லியன் டொலர்களை நாங்கள் செலுத்தவேண்டும் என்பதாலும்,மருந்துகள் எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களிற்குமான பணம் தேவை என்பதாலும் இது மிகவும் கடினமான நிலை என்பது எங்களிற்கு தெரியும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிணைமுறி முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு நிதியமைச்சர் அந்தமாதிரி ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு என்ன தேவை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்-மேலும் பிணைமுறி முதலீட்டாளர்கள் எதனை கொண்டிருக்க விரும்புவார்கள் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply