மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கிய சந்தேகத்திற்கு இடமான நாட்டுப் படகு

DSC 0580 மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கிய சந்தேகத்திற்கு இடமான நாட்டுப் படகு

மன்னார் கடற் பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப் படகு கரை யொதுங்கியது.

மன்னார் காவல் துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை  மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப் படும் படகு ஒன்று  கடற் கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப் பட்டுள்ளது.

குறித்த படகில் பதிவு இலக்கமோ, படகின் இலக்கமோ இல்லாத நிலையில் படகில் ‘அர்ச்சனா’ என பெயர் குறிப்பிடப்பட்டு சிறிய உடைவுகளுடன்  படகு காணப் பட்டுள்ளது.

குறித்த படகு காற்றின் வேகம் காரணமாக கரை யொதுங்கியுள்ளதா? அல்லது சட்ட விரோத கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்டு கைவிடப் பட்டுள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கிய சந்தேகத்திற்கு இடமான நாட்டுப் படகு