சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு…

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை , கைது நடவடிக்கையை வரவேற்றுள்ளது.