உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி,பிரதமருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை-  மல்கம் ரஞ்சித் கேள்வி

malcolm ranjith 700x400 1 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி,பிரதமருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை-  மல்கம் ரஞ்சித் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமை குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பி யுள்ளார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள 20 பக்க கடிதத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள்- அதனை திட்டமிட்டவர்கள் -முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கைகளை எடுத்து அதனை தடுத்து நிறுத்தாமல் தங்கள் கடமைகளை வேண்டு மென்றே புறக்கணித்தவர்களை நீதியின் முன்நிறுத்தும் விடயத்தில் அரச இயந்திரம் மிகவும் மெதுவாக செயற்படுவது குறித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் களிற்கான நீதிக்கான கத்தோலிக்க குழு ஏமாற்றம் அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் தாமதப் படுத்துகின்றனர் அல்லது அலட்சியம் செய்கின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பி யுள்ளார்.

தனது பொறுப்பை நிறைவேற்ற தவறினார் என்பதற்காகவும், அவரது அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற தவறியது என்பதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக் குழு பரிந்துரைத் துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித், அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வில்லை, இந்த பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடந்த ஐந்து மாதங்கள் போதுமானவையாக இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து ஏன் நடவடிககைகள் எதனையும் எடுக்க வில்லை எனவும் கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி,பிரதமருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை-  மல்கம் ரஞ்சித் கேள்வி