கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுவதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.