குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மேலும் ஒரு மாணவி உயிரிழப்பு

281 Views

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மரணங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணி பகுதியை சேர்ந்த  ரபீஸ் பாத்திமா நபா வயது(06) சிகிச்சை பலனின்றி  நேற்று (27)உயிரிழந்துள்ளார்.  

கடந்த 23.11.2021 அன்று காலை இடம் பெற்ற படகு விபத்தின் போது  கிண்ணியா அல் அஷ்கர் வித்தியாலயத்தில் தரம் 1 ல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்த சோக சம்பவத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில்

இந்நிலையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து சம்பவத்தின் பின் இலவச படகு சேவையை இலங்கை கடற்படை பொறுப்பெடுத்துள்ளது

பாலம் புனர் நிர்மாணம் முடிவடையும் வரை குறித்த கடற்படையின் படகு சேவை இடம் பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து “குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உண்மையை மறைத்து அப்பாவிகளை கைது செய்வதாக இருக்கக்கூடாது. அனுமதி கொடுத்ததற்காக நகர பிதா நளீமையையோ படகு ஓட்டுனரையோ கைது செய்ய முடியாது”  முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply