அத்தியாவசிய பொருட்களின் விலையேற்த்தை கண்டித்து வல்வெட்டித்துறையில் போராட்டம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர் பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (28) முன்னெடுக்கட்டுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டம்எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பத் தெரிவிக்கும் வகையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வல்வெட்டித்துறை கிளையினரால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எரிபொருள் விலை, எரிவாயு விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வலியுறுத்தும் பதாகைகளை தாங்கியவாறும், வெற்று சமையல் எரிவாயு உருளை ஒன்றினையும்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News