மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினர் பொதுமக்களிடமிருந்து கையெழுத்து வேட்டை ஆரம்பித்துள்ளார்கள். என ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தீபன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்
மாவீரர் துயிலும் இல்லங்களின் கண்ணியத்தையும் உணர்வுகளையும் உதாசினம் செய்யும் நோக்கில் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் துயிலும் இல்லங்களை மாற்றம் செய்வதால் விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளை முற்றும் முழுதாக அளிக்கும் நோக்கில் செயல்படுகின்றார்கள்
அவற்றை கண்டித்து மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் என்ற அமைப்பு கையெழுத்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.



