இலங்கை-போராட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை

72 Views

காலி முகத்திடல் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்களை கைது செய்யும் முனைப்பில்  காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட 150 இளைஞர்களின் பட்டியலை காவல்துறையினர் தயாரித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த செயற்பாட்டாளர்களை கைது செய்து விசாரணை நடத்துவதற்கு 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தவுள்ளதாக குறித்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply