இந்திய இமயமலைப் பகுதி யான லடாக்கில் கூட்டாட்சிப் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்டபோராட்டம் வன் முறையாக மாறியது. போரா ட்டக்காரர்கள் காவல்துறையினரு டன் மோதியதாலும், துணை ராணுவ வாகனம் மற்றும் நாட்டின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அலுவலகத்திற்கு தீ வைத்ததா லும் இந்த போராட்டம் வன் முறை யாக மாறியது.
கடந்த புதன்கிழமை(24) காவல்த்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்ததாகவும் அவர் களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படு கின்றது. மோதல்களுக்குப் பிறகு லடாக் பிராந்தியத்தின் தலை நகரான லே மாவட்டத்தில் ஐந்துக் கும் மேற்பட்டோர் ஒன்றுகூடுவதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
உயிரிழப்புகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை, ஆனால் சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள பிராந் தியத்திற்கு கூடுதல் அதிகாரம் கோரி உண் ணாவிரதம் இருக்கும் உள்ளூர் ஆர்வலர் ஒருவர், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று முதல் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக நம் பப்படுகிறது என்று இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 21, 2024 அன்று இமயமலைப் பகுதியான லடாக்கிற்கு அரசியலமைப்பு பாது காப்புகள் மற்றும் மாநில அந்தஸ்து கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். நிலம் மற்றும் விவசாய அதிகாரங்கள் கொண்ட சுயாட்சிக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு விதி களை கோரும் கூட்டாட்சி நிர்வாகப் பகுதியில் ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டங்கள் உள்ளன.
2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்து இப்பகுதியைப் பிரித்தபோது லடாக் அதன் சுயாட்சியை இழந் தது. அப்போதிருந்து, பெரும்பான்மையான முஸ்லிம்-பௌத்த பிரதேசம் புது தில்லியில் இருந்து நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. சீனாவுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் லடாக், இந்தியாவிற்கு ஒரு மூலோ பாய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும்.