இலங்கை அரசாங்கம் இதுவரை நிதி உதவி கோரவில்லை: சர்வதேச நாணய நிதியம்

அரசாங்கம் இதுவரை நிதி உதவி கோரவில்லை

மிகைக் கட்டண வரி அறவீடு தொடர்பில் நாட்டில் விவாத நிலைமை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF)   இலங்கை தொடர்பில் தௌிவுபடுத்தியது.

வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்படவில்லையென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.

இலங்கை நிதி அமைச்சின் திறன் விருத்திக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியதாகவும் இலங்கை அரசாங்கம் இதுவரை நிதி உதவி கோரவில்லை எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் Gerry Rice தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால், உதவ தயாராக இருப்பதாகவும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி தொடர்பில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் Gerry Rice மேலும் கூறினார்.