சீனாவிடம் இருந்து இலங்கை பல கோடி கடன்: நாட்டின் சொத்துக்களை இழக்க நேரிடலாம் – நிபுணர்கள்  எச்சரிக்கை

516 Views

120029002 adea0829 7c05 4cea 95f7 48e6400aa29f சீனாவிடம் இருந்து இலங்கை பல கோடி கடன்: நாட்டின் சொத்துக்களை இழக்க நேரிடலாம் – நிபுணர்கள்  எச்சரிக்கை

சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் கடன் தொகைக்கு வட்டி வீதம் அதிகம் எனவே குறுகிய காலத்தில் இந்த கடனை செலுத்த தவறும் பட்சத்தில், நாட்டிலுள்ள சொத்துகளை சீனாவிற்கு எழுதி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என பேராதனை பல்கலைக் கழகத்தின் பொருளியல் பீட பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் சர்வதேச செய்தி நிறுவனமான  பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வி யொன்றில் எச்சரித்துள்ளார்.

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் திகதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கை யொன்றின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப்பட்டு ள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப் பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த கடன் விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன்,

சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட  கடன் தொகையை செலுத்த முடியாமல் போகும் நேரத்தில்,   பல்வேறு தேவையற்ற ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்படும்.

சர்வதேச செலாவணி நிதியம் அல்லது உலக வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளும் போது பிரச்னைகள் இருக்காது. நாடொன்றிடமிருந்து கடன் வாங்கும் போது பிரச்னை காணப்படும்.

சீனா, மானியங்களை வழங்காது. கடன்களையே வழங்கும். சீனா, தமது வர்த்தக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறான கடன்களை வழங்குகின்றது.

அதனால், சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் கடன் தொகையானது, இலங்கையை சீனாவின் ஆளுகைக்குள் வைக்கும் நிலைமையை ஏற்படுத்தும்”  என்றார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply