இலங்கையின் சுதந்திர தினம்: கருப்பொருள் வெளியீடு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்”  என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.