எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை இலங்கை மக்களுக்கு உண்டு-அமெரிக்க தூதுவர்

360 Views

எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை

எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை இலங்கை மக்களுக்கு உண்டு

அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தும் உரிமை இலங்கை பிரஜைகளுக்கு உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக வெளிப்பாட்டிற்கு இது அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கையின்  தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அனைத்து தரப்பினரும் நிதானமாக செயற்பட்டு, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, துன்பப்படுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் நம்புவதாகவும்   தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply