வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்யும் செயல்முறை தொடர்பாக ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை சுமார் 188 மில்லியன் யூரோக்கள் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.



