கொரோனா : உலகளவில் முன்னேறிய இலங்கை?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகளவில் 54,558,120 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 1,320,148 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது. 61 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலில் இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது

மேலும் 98 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள பின்லாந்தில் 19 ஆயிரத்து 419 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேநேரம், 17 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள மடகஸ்கார் 101 ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த மரணங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரையில், 28 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் 61 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஏனைய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளது.