ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது.
இதன்மூலமாக தெற்காசிய நாடுகளில் குறித்த சாசனத்தில் கையொப்பமிடும் இரண்டாவது நாடாகவுள்ள இலங்கையின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண தனபால ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இச்சாசனத்தில் இணைந்து கொண்டதன் ஊடாக, ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட ஏனைய 72உறுப்பு நாடுகளுடன் இணைந்து கொள்கின்றது.
இச்சாசனத்தில் கையொப்பமிடுவதன் மூலமாக சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை ஏற்படுத்துவதையும் இலக்காக கொண்டுள்ளது.
அத்துடன், இலங்கையானது மூன்று மாதங்களுக்குள் சைபர் பாதுகாப்பை மையப்படுத்தியதாக அமைச்சுக்களுக்கு இடையேயான பொறிமுறையொன்றை ஆரம்பிக்கவுள்ளதோடு இதுவொரு தேசிய ரீதியான நடவடிக்கைகயின் மையப் புள்ளியாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



