இலங்கை :40 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாட்டிலுள்ள அரச  மருத்துவமனைகளில் தற்போது 40 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்நிலையில்,அடுத்த வாரமளவில் நாட்டின் சுகாதார கட்டமைப்பு பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாட்டில் சுகாதார அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன்,நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டும் வகையில் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தேசிய வைத்தியசாலையின் வைத்திய குடியிருப்பிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி லிப்டன் சுற்றுவட்டம் வரை பயணித்ததுடன், அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.