சர்வதேச நாணய நிதியத்திடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைக் கோரிய இலங்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் எவன் பபஜோர்ஜியூ (Evan Papageorgiou), இலங்கை அரசாங்கத்தின் புதிய நிதிக் கோரிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் விரைவு நிதியுதவி கருவியின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைக் கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்தக் கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின நிர்வாகக் சபையின் ஒப்புதலுக்குப் பின்னரே இந்தக் கடன் உதவி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.