ஊழல் அடிப்படையிலான பட்டியலில் இலங்கை 121ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இலங்கையில் பலர் நேர்மையாக இல்லை. நாட்டில் ஊழல் அதிகரிப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணி. டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் 180 நாடுகளை அழைத்து ஊழல் குறித்த அளவுகோலை உருவாக்குகிறது. ஊழல் குறைவாக உள்ள நாடு முதலிடத்தில் உள்ளது. ஊழல் அதிகமாகவுள்ள நாடு 180ஆவது இடத்திலுள்ளது. இலங்கை 121ஆவது இடத்திலுள்ளது-என்றார்.